’13 பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. அதுபற்றிப் பேச வேண்டாம்!! மேனனுக்குச் சொல்கியிருக்கிறார் கோத்தாபய
13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் கீழ் பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்குவதானது இலங்கையின் தேசிய பாதுகாப்பு அபிலாசைகளுக்கு எதிரானது என்பதால் அதுபற்றி மேலும் கதைப்பது எவ்விதப் பிரயோசனமுமற்ற செயல் என கோத்தாபய ராஜபக்ஷ இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனனுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையின்போது இதுபற்றித் தெரிவித்துள்ளதாக வார இறுதி ‘ஐலண்ட்’ ஆங்கிலப் பத்திரிகை குறிப்பிடுகிறது.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும், தேவையற்ற பிரச்சினைகள் மட்டுமே ஏற்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அங்கு தெளிவுறுத்தியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் இதுபற்றி முன்னரும் பலதடவைகள் தெளிவுறுத்தியுள்ளார். கோத்தாபய ராஜபக்ஷவின் கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் மேனன், இந்தியா இதுபற்றி சிந்தித்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பிறிதொரு இயந்திரத்தைத் செயற்படுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேனனுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடாத்தும்போதுகூட மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதானது பல பிரச்சினைகள் எழ வழிவகுக்கும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகரிடம் குறிப்பிட்டிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளதாக அப்பத்திரிகையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment