எந்த தடை வந்தாலும் 13 ஐ மாற்றியமைத்தே தீருவோம்! கெஹெலிய ரம்புக்வெல்ல
கண்டி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களை சந்தித்து அரசின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து அறிவுறுத்திய அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல நாட்டின் நாளைய பாதுகாப்புக்காக 13வது அரசியல் யாப்பின் சீர்திருத்தங்களை எந்த தடைகளும் சந்திக்க நேரிட்ட போதிலும் இடைநிறுத்த போவதில்லை என தெரிவித்துள்ளார்.
அரசின் ஊடக பேச்சாளர் என்ற வகையில் அரசின் நிலைப்பாட்டினை தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது எனத் தெரிவித்து மேற்கண்ட விடயத்தை கூறியுள்ள அவர் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது : „மக்களின் தேவைக்கு ஏற்றவாரும் நாட்டின் சமகால மாற்றங்களுக்கு ஏற்றவாறும் அரசியல் யாப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது. உலகில் அதிசிறந்த ஜனநாயகம் என கூறப்படும் இந்தியாவிலும் 69 தடவைகள் அரசியல் யாப்பு சீர்திருத்தப்பட்டன. எமக்கு அரசியல் யாப்பில் சீர் திருத்தங்களை மேற்கொள்வதில் எதுவித பிரச்சினைகளும் இல்லை. 13வது அரசியல் யாப்பினை ஒழிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. யாப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவே மக்கள் சார்பில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.'
0 comments :
Post a Comment