Wednesday, July 3, 2013

13 ல் ஏதாவது பிரச்சினை இருப்பின்,அதனை இலங்கை தீர்த்துக் கொள்ளவேண்டும்! இந்தியா அல்ல!

13 ஆவது அரசியலமைபு திருத்தமானது இந்தியா இலங்கைக்கு இடையிலான நல்லுறவுக்கு எவ்விதமான பங்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், அரசியல மைப்பின் 13 ஆவது திருத்தமானது தேசிய பிரச்சினை எனவும், இந்த பிரச்சினையை இலங்கையிலேயே தீர்க்கவேண்டும் என்பதுடன், 13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் இந்தியா கூறுவதை கேட்க வேண்டியதில்லை என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தியாவுடன் எமக்கு நல்லுறவு இருக்கின்றது. இதுவொரு விவகாரமல்ல, 13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் ஏதாவது பிரச்சினை இருக்குமாயின் அதனை இலங்கை தீர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர, இந்தியா அல்ல என்றும் தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டு தீர்வே காணப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

2 comments :

கரன் ,  July 3, 2013 at 12:45 PM  

இந்தியாக்காரன் அவனுடைய வேலையை பார்த்துக்கொள்ளட்டும் என்று தெட்டத்தெளிவாக சொன்னதற்கு மீண்டும் ஒரு சலுட்..

Anonymous ,  July 3, 2013 at 7:01 PM  

We need to solve our problems or difficulties under our roof.We still have a roof over our heads.TNA`s jumping Kangaroo politics upto Delhi only to make us fools.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com