பாகிஸ்தானின் 12 ஆவது ஜனாதிபதியாக மம்நூன் ஹசைன் தெரிவு!
பாகிஸ்தானின் 12 ஆவது ஜனாதிபதியாக வர்த்தகரான மம் நூன் ஹசைன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இடம்பெற்றது.
வழங்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அவர் 432 வாக் குகளை பெற்றுள்ளார். ஹூசைனை எதிர்த்து போட்டியிட்ட வஜிஹதீன் அஹமட் 77 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டதாக பாகிஸ்தானின் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக மம்நூன் ஹூசைன் தெரிவு செய்யப் பட்டுள்ளதை தேர்தல் ஆணையாளர் பக்ஹருதீன் இப்ராஹிம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
73 வயதான மம்நூன் ஹூசைன் 5 வருடகாலத்திற்கு பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார். இதேவேளை நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாப் பதற்காக செயற்படவுள்ளதாக புதிய ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை பாகிஸ்தானில் முதற்தடவையாக ஒரே ஆண்டில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment