12 வயது சிறுமியை தாயாக்கிய 74 வயது முதியவர்
12 வயதான சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி தாயாக்கிய குற்றத்திற்காக சீனாவின் ஹானான் மாகாணத்திலுள்ள கியாங் எனும் ஊரைச் சேர்ந்த 74 வயதான முதியவர் ஒருவருக்கு 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12 வயதான சிறுமி ஒருவர் அண்மையில் ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்ததை தொடந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து இச்சிறுமியை குறித்த முதியவர் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதுள்ளதுடன் டி.என்.ஏ சோதனைகளின் மூலம் சிறுமியின் குழந்தைக்கு இந்த 74 வயதான நபரே தந்தை என்பதனையும் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
ஆனால் சிறுமியோ தனது பாடசாலையைச் சேர்ந்த 3 ஆசிரியர்களே தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் அம்முதியவர் எனது குழந்தை தந்தை அல்ல குறிப்பிடுகின்றது அதேபோலவே அச்சிறுமியின் குடும்பத்தாரும் ஆசிரியர்களே குற்றவாளிகள் என நம்புவதுடன் விசாரணைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பொலிஸாருக்கு ஆசிரியர்கள் இலஞ்சம் வழங்கியதை தான் நேரில் கண்டதாகவும் தன்னை ஆசியர்கள் தொடர்பில் பேசக்கூடாது என பாடசாலை அதிபர் மிரட்டியதாகவும் விசாரணைகளில் அச்சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment