வேலியே பயிரை மேயலாமா? D.I.G வாஸ் குணவர்தன தொடர்பில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு!
படுகொலைச் குற்றச்சாட்டொன்றின் பெயரில் கைதுசெய் யப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பில் பவ்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலி சந்தேக நபர்களை D.I.G வாஸ் குணவர்தன விசாரணைக்குட்படுத்தியபோது, அவர்களிடமிருந்து பல தமிழ் வர்த்தகர்களின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கதைத்த அவர், புலிகள் இயக்கத்துடன் உங்களுக்கு தொடர்பு இருக்கின்றமை எமக்கு தெரியும் என்றும், அதுபற்றிய தகவல்கள் எங்களிடம் இருக்கின்றன எனவே நீங்கள் கைதாகாமலிருக்க வேண்டுமென்றால் கப்பம் வழங்க வேண்டுமென்று அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் அரசியல்வாதியொருவருடைய செயலாளரை தொலைபேசியில் அச்சுறுத்தி 72 மணித்தியாலங்களுக்குள் ஒன்றரை இலட்சம் ரூபாய் கப்பம் பெற்றமை தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதுடன், குறித்த தொலைபேசி அழைப்பை பம்பலப்பிட்டி பாதணி வர்த்தகரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதான பொலிஸாரில் ஒருவரே மேற்கொண்டிருந்ததாகவும் குறிப்படப்படுகிறது.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தமிழ் வர்த்தகர்கள் அடங்கலாக பலரை அச்சுறுத்தி இலட்சக்கணக்கில் கப்பம் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன பம்பலப்பிட்டி பாதணி வர்த்தகரான மொஹம்மட் சியாம் படுகொலை தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குவர்தனவை விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார் எனவும், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கலொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாலபே தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவன் ஒருவரை கடத்திச்சென்று தாக்கியமை தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு சட்டமா அதிபர் ஏன் தவறினார் என நியாயம் கேட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
2 comments :
குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய பொலிஸாரே இவடவாறான கீழ்தரமான செயல்களில் ஈடுபடுவதானது முழு பொலிஸ் திணைக்களத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றது.
பணத்துக்காகவும் இன்னும் சில செற்பவிடயங்களுக்காகவும் அப்பாவி குடுப்பங்களை அழிக்கும் விதத்தில் இவன்போன்ற பொலிஸ் அதிகாரிகள் கைகூலிகளாக செயற்படுவதானது மிகவும் அருவருக்கத்தக்க செயலாகும். இதைவிட பிச்சையெடுப்பது எவ்வளவே மேல்
எது எப்படியே இலங்கை அரசாங்கம் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துகின்றது என்பதை மீண்டும் நிருபிப்பதற்காக கைதுசெய்யப்பட்ட இவனுக்கு தகுந்த தண்டனை வழங்குவதுடன் எந்த பொலிசும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதற்கு பயம்படும் விதத்தில் இவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
இந்த DIG யின் கடந்த கால வரலாற்றை பார்த்தால் இவன் ஒரு ஊழல் நிறைந்தவன் என தெட்ட தெளிவாக புரிகின்றது. எனவே உரிய அதிகாரிகள் இவனுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
Post a Comment