Monday, June 17, 2013

கதிரை மாற தயாராகின்றார் மாவை. எதிர்வரும் நாட்களில் இராஜனாமா!

வட-மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் பெரும் போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது எனலாம். எது எவ்வாறாயினும் இப்போரின் மத்தியில் மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற முடிவை சம்பந்தன் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

இம்முடிவின் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் மாவை பாராளுமன்ற பதவியை இராஜனாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவையின் இராஜனாமாவால் உருவாகப்போகும் பராளுமன்ற கதிரைக்கு வர இருப்பவரை விழுத்தி அக்கதிரையில் குந்துவதற்கு அவருக்கு பின்னால் நிற்பவர் ஒடித்திரிவதாகவும் அறியக்கிடைக்கின்றது.

மத்தியில் மச்சான் மாநிலத்தில் நான் என சம்பந்தனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த வித்தியாதரன் , கட்சியை பதிவு செய்! எங்களுக்கும் சம அந்தஸ்த்து தா! தமிழரசுக் கட்சியின் எடுபிடிகளாக எங்களை வைத்திராதே! என்று கேட்டுக்கொண்டிருந்த மண்டையன்குழுத் தலைவர் சுரேஸ் , படித்த நல்ல மனிதனை நிறுத்துங்கள் கள்ளர் காடையர்களை விரட்டுங்கள் என்ற முன்மொழிவை குசுகுசுத்துக்கொண்டிருந்த சில படித்த மனிதர்கள் என யாவரும் கையை பிசைவதாக அறியக்கிடைக்கின்றது.

வித்தியாதரன் தான் சுயேட்சையாக குதிக்கப்போகின்றேன் என மிரட்டியதாகவும் முடிந்தால் புடுங்கி காட்டுங்கள் என கட்சியின் பிரமுகர் ஒருவரிடமிருந்து பதில் வந்தாகவும் அறியக்கிடைக்கின்றது.

மேலதிக உள்வீட்டு சமாச்சாரங்கள் எதிர்வரும் நாட்களில்...

8 comments :

Anonymous ,  June 17, 2013 at 5:37 AM  

தமிழ் மக்களை பொறுத்தளவில், புலிகள், புலிகளுக்கு தாளம் போட்ட தமிழ் கூட்டணி, புலிபினாமிகள், புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் ஆணவம், கர்வம், தலைக்கணம், கபடத்தனம், தவறுகள், பிழைகள் எல்லாமே அன்று கிடைத்த பொன்னான சந்தர்ப்பங்கள், வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் தட்டிக்கழித்து, வட, கிழக்கு மாகாண சுய ஆட்சியையும் தூக்கி எரிந்து விட்டு, உலக நாடுகளையும், அவர்களின் புத்திமதிகளையும் தட்டிக்கழித்து, இறுதியில் ஒட்டுமொத்த தமிழினத்தை நடுத்தெருவில் கையேந்த விட்டுள்ளது.
இது ஈழத்தமிழரின் சரித்திரத்தில் நிதந்தரமாக எழுதப்பட்ட சரித்திர உண்மை.

தவறு செய்தவர்கள் எவரும் இனி ஈழத்தமிழர் மத்தியில் எதற்கும் தகுதி அற்றவர்கள்.
எனவே ஒரு நடுநிலை, நேர்மை, நீதியான ஒரு வேட்பாளரையே மக்கள் எதிர்பார்கின்றனர்.


RAVI ,  June 17, 2013 at 8:14 AM  

the above statement is perfectly correct......

Anonymous ,  June 17, 2013 at 9:40 AM  

எங்கே அந்த இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதி ?

வட மாகாண முதலமைச்சர் ஓர் நேர்மையான, திறமையான, நடு நிலமையானவராய் இருத்தல் வேண்டும். த தே கூ விலிருந்து ஒருவரைத் தெரிவு செய்வதென்பது மட்டி, மடையன், மூடன், மிலேச்சன்,கள்ளன், காடையன்,காவாலிகளிருந்து தெரிவு செய்வது போன்றதாகும்.அதிலும் பார்க்க jail ல் போய் ஒருவரைத் தெரிவு செய்யலாம்.

60 களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் சிறுபான்மை மக்களை விடாமல் தடுத்த ஜாதித் தடிப்பு காவாலிகளில் மாவையும் ஒன்று. இது முதலமைச்சர் ஆவதா? அன்றி மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் (புலிக்கும் அரசுக்கும்) காட்டிப் பிழைத்து வந்த சப்ரா கொள்ளையனைத் தெரிவு செய்வதா?
அதிலும் பார்க்க எங்களுக்கு தமிழ் முதலமைச்சரே வேண்டாம் சாமி!!!!!!!!!!!!!!!!!!!

பிச்சை வேண்டாம்..........நாயைப் பிடியுங்கோ ............

Anonymous ,  June 17, 2013 at 2:10 PM  

எங்கே அந்த இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதி?

Who gives trouble to him?

Anonymous ,  June 17, 2013 at 4:24 PM  

Northern province needs a suitable person to the chiefminister post with a highly academic qualification
experience and all the qualities that makes a delicate character.TNA has got really a lot of strange characters.Genorosity too to be included to the charcter concern.However it is hard to find a suitable person,the ex retired high court judge may be the suitable person,but Mr.SAM needs a person for his humming and familiar tune.Mr.Sam is already out of tune with public opinion,because the public has the
experience of over 60 years with Fed party/Tamil Arasu and present TNA.Finally we believe that Mr.Sam`s selection accordingly for his humming and familiar tune.Everything depends on voters hands.

Anonymous ,  June 17, 2013 at 8:54 PM  

Sympathy votes,favouritism votes,
Votes under nepotism cannot bring
prosperity to the province ,because we have the hard experiences.This candidate will be a puppet of Mr.Sampan & co.We need a delicate character not dancing accordingly to the tune of his masters.

Anonymous ,  June 18, 2013 at 8:58 AM  

காலம் மாறிப் போச்சு தண்ணே கதிரையும் மாறப் போகுதண்ணே
கோலம் இதுதான் நாட்டில் அண்ணே உன் கோவணத்தைக் காப்பாற்றண்ணே

Anonymous ,  June 23, 2013 at 10:55 AM  

I really wonder and have no answer why this peninsula haven`t got a suitable person for this job.Do you think that we have only three or four guys to represent us in every matters.This is an old Federal party`s important prayer or proverb or"Tharaka Mantra".

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com