Saturday, June 1, 2013

இலங்கை இராணுவம் தமிழரின் தாய்நிலத்தை அபகரித்ததே உண்மை!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, எல்.ரீ.ரீ. இயக்கம் தமிழர்களுக்காக எழுந்துநின்றது என்றும் ஸ்ரீலங்கா இராணுவம் அந்த இயக்கத்தை அழித்து தங்களது தாய்நிலத்தை ஆக்கிரமித்து வருவதாகவும் குறிப்பிட்டதற்காக, தேசிய சுதந்திர முன்னணி தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

அதுவிடயமாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

எல்.ரீ.ரீ.யினரில் அபரிமித இன்னல்களுக்கு மத்தியில் உயிர்நீத்தோர் பல்லாயிரக்கணக்கானோராவார். மற்றையவர்களுக்கு மனிதாபிமான முறையில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது முப்படையினராகும். இப்படியான உண்மை ஒருபுறமிருக்க மாவை சேனாதிராஜா நன்றி மறந்து பேசுவது நகைக்கத்தக்கது. ஆயினும் தற்போது வடக்கில் குடியேறியுள்ள தமிழ் மக்கள் செய்ந்நன்றி மறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. மேலும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளதாவது, தங்களது கட்சி உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான கட்சிகள் கடந்த காலகட்டத்தில் எல்.ரீ.ரீ. இயக்கத்தினருடன் பெரும் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டதாகவும், தாம் அதற்கு ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கேற்ப, எல்.ரீ.ரீ. கொலைகார, பிரிவினைவாத பயங்கரவாதிகளுடன் தாம் நெருங்கிய தொடர்புகொண்டிருந்ததாகவும், தமது ஆசிர்வாதத்துடன் அது முன்னணியிற் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ள சேனாதிராஜா இனவாதத்தைத் கட்டியெழுப்புவதற்கு தமது கட்சி பங்குகொண்டதென்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

தமிழ் முஸ்லிம்கள் வாழ்கின்ற தங்களது தாய்நிலத்தில் தேவையில்லாமல் இராணுவம் உட்புகுந்து தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பறித்துவருவதாகவும், அதற்கு அரசாங்கம் உடந்தையாக இருப்பதாகவும், அதற்காக சீனாவின் உதவி பெறப்படுகின்றது என்றும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

சீனாவையும் அருகழைத்துக் கொண்டு, இவ்வாறு சேனாதிராஜா பேசுவதிலிருந்து தெளிவாக விளங்குவது என்னவென்றால், அவர்கள் இவ்வாறு செயற்படக் காரணம் மேற்கத்தேயத்தினதும், இந்தியாவினதும் விருப்பத்தை நிறைவேற்றவேயாகும்.

இந்நேரம் மாவை சேனாதிராஜாவினதும் பிரிவினைவாத எண்ணம், மேற்கத்தேய ஏகாதிபத்தியவாதிகளினதும், இந்தியாவினதும் அபிலாஷைகளுடன் ஒன்றிணைவதைக் காணலாம். இவ்வாறான தகாத இனவாதப் பேச்சுக்களை இந்நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயற்படுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஒருசேர நிராகரிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.'

(கேஎப்)

2 comments :

Anonymous ,  June 1, 2013 at 11:20 AM  

He had gained a lot of experience in political opportunism and he knows how to survive.They are the people we
call as Survival of the fittest the principle that only the people or things that are best adopted to their sorroundings will continue to exist.

ஈய ஈழ தேசியம் ,  June 2, 2013 at 12:48 AM  

சரியான அறிக்கை சேனாதிராஜாவுக்கு.
பாராட்டுகள் தேசிய சுதந்திர முன்னணிக்கு.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com