Thursday, June 27, 2013

பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்குக் கொடுக்கவே மாட்டேன் - மகிந்தர்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க்க்கூடாது என்பதுடன் இரு மாகாணங்களுக்கு தங்களது விருப்பில் இணைந்து கொள்வதற்கும் இடமளிக்கப்படக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (26) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் தெரிவிக்கப்பட்டு ஆமோதிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைத்திரிபால சிரிசேனா முன்வைத்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இவ்விடயத்தில் ஏகோபித்த முடிவுடையவர்களாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிராந்தியங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு ஆகும். எனினும், இலங்கை போன்ற சிறிய நாட்டில் அமைந்துள்ள மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்றும் தெளிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால், நாட்டில் மீண்டும் ஈழமொன்று உருவாவதற்குரிய பாதையை அது காட்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, அதனால் எந்தவொரு மாகாண சபைக்கும் காணி, மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவொரு எண்ணமும் கிடையாது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com