இலங்கையில் அரபு வசந்தம் போன்ற எழுச்சி ஒருபோதும் ஏற்படாது!- கோத்தபய
சமூக வலையத்தளங்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான ஆற்றல்களை கொண்டுள்ளதாகவும், டுனீசீயா, லிபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உருவான மக்கள் எழுச்சிக்கு சமூக வலையத்தளங்களே அடித்தளமிட்டன என தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ,இலங்கை சிறந்த அரசியல் தலைமைத்துவம் கொண்ட ஜனநாயக நாடாக காணப்படுவதனால், இலங்கையில் அரபு வசந்தம் போன்ற எழுச்சி ஏற்படுவதற்கான வாய்ப்போ, தேவையோ இல்லையென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக வலையத்தளங்களை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அதிகளவான ஆளணி தேவையில்லை என்றும், இவ்வாறான குழப்பவாதிகளை பாரம்பரிய பாதுகாப்பு முறையினால் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனால் புலனாய்வு அமைப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்ட கட்டளை அடிப்படையின் கீழ் பணிபுரிவது அவசியமென பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் நல்லுறவை பேணுவது முக்கியம்வாய்ந்ததாக அமைந்துள்ளது. வீடோ அதிகாரமுள்ள குறித்த நாடுகள் இலங்கை மீதான சர்வதேச நடவடிக்கைகளின் போது தமது செல்வாக்கை பயன்படுத்தி இலங்கையை பாதுகாக்குமெனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment