போலி விசா தயாரிப்பு நிலையம் புத்தளத்தில் முற்றுகை! இருவர் கைது!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதாக தெரிவித்து, போலி விசாக்களை தயாரித்த இருவரை கைது செய்துள்ளதாகவும், போலி விசா தயாரிப்பதற்காக பயன்படுத்திய கணனியொன்றும், ஏனைய ஆவணங்களையும், கைப்பற்றியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி விசா தயாரிக்கும் அலுவலகமொன்று புத்தளத்தில் இயங்குவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் புத்தளம் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இவ்வாறு தயாரித்த போலி விசாக்கள் மூலம் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்வதற்காக விசாவை ஒன்றிற்காக 2 இலட்ச ரூபா வரையில் அறவிட்டுள்ளார். இவ்வாறு பலரிடம் பல லட்சம் ரூபாவை மோசடி செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment