இலங்கை – இந்திய கூட்டு ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கமே முதலில் மீறியது! விமல் வீரவன்ச
ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் இலங்கை தலையீடுகளை மேற்கொள்வதில்லை. இலங்கை மீது இந்தியாவோ, வேறு எந்த நாடுகளோ அழுத்தங்களை முன்வைப்பதற்கு உரிமையில்லை!
இலங்கையின் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடுகளோ அழுத்தங்களை முன்வைப்பதற்கு எந்தவித உரிமையும் இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் இலங்கை தலையீடுகளை மேற்கொள்வதில்லை எனவும், எமது நாட்டின் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான உரிமை இலங்கை அரசாங்கத்திற்கு மாத்திரமே காணப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை பயன்படுத்தி இந்தியா, இலங்கையின் உள் விவகாரங்களில் செயற்பட முயற்சிக்கின்றது எனவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும், இந்திய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அதனை வெளிப்படையாக காட்டுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கோள் காட்டியுள்ளார்.
இலங்கை – இந்திய கூட்டு ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கமே முதலில் மீறியதாகவும், இலங்கை தரப்பினர் குறித்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் பாதுகாப்து வருவதாகவும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
1 comments :
விமல் வீரவன்ச ஒரு இனவாதியாக இருந்தாலும், அவர் குறிப்பிடும் விடயங்கள் ஜதார்த்தமானவையாகவும் சிந்திக்க கூடியவையாகவும் உள்ளன. ஓரு நாட்டின் உள்வீட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு வேறு நாடுகளுக்கு உரிமையில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை
Post a Comment