சவூதி சென்ற மகளை மீட்டுத் தருமாறு பெற்றோர் கோரிக்கை!
வீட்டு பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு, வாகரை ஐம்பது வீட்டுத் திட்டக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தேவராசா பானுமதி என்ற எமது மகளை மீட்டுத் தருமாறுகோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர முதல்வருமான அலிஸாஹிர் மௌலானாவிடம் முறையிட்டுள்ளனர்.
அம்முறைப்பாட்டில், ‘சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் வாகரையிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சவூதி நோக்கிப் புறப்பட்ட தமது மகள் அடி, உதை, கொதிநீரை உடம்பில் ஊற்றுதல் உட்பட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளதுடன் அவர் பணிபுரிந்த காலத்தில் எதுவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை. கடைசியாக இவ்வருடம் பெப்ரவரி மாதம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் கொதி நீரால் சித்திரவதைக்கு உட்பட்டுள்ளதாகவும் தன்னை எப்படியாவது இந்த வீட்டின் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றுமாறும் கூறினார்.
அதன் பின்னர் அவருடனான தொடர்புகளும் அறுந்து போய்விட்டன. இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையிட்டும் இதுவரை நம்பிக்கை தரக்கூடிய பதில் எதுவும் அவர்கள் தராததால் இந்த விடையத்தை உடனடியாக ஏறாவூர் நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானா வின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து உடனடியாகவே இந்த விடையத்தை சவூதி அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக ஏறாவூர் நகர முதல்வர் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார்.
2 comments :
நாம் ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்களை கண்டுள்ளோம். எங்கள் நாட்டு பெண்கள் காட்டுமிராண்டிகளின் நாடுகளுக்கு அனுப்பப்படுவதை தடை செய்யவும் மகிந்த அரசாங்கத்தை, அரசியல் வாதிகளை பல தடவைகள் கோரியுள்ளோம்.
ஆனால் இதுவரைக்கும் எவரும் கருத்தில் எடுத்ததாக தெரியவில்லை.
மக்களையும், நாட்டையும் கவனிக்காது, தங்கள் சுயநலங்களையும், சுய தேவைகளையும், தங்கள் வங்கி கணக்குகளையும் மட்டும் பார்க்கும் அரசியல் வாதிகள் சாதாரண மனிதராக சிந்திப்பார்களா?
The government is compelled to saveguard the lives of the citzens.
but ignorance and negligience play an important role with the lives of the domestic servants being sent to middle east countries to sacrfice their lives unnecessarily.Why the poverty line people think these barberic countries as paradise,certainly they are lacking
of knowledge about the brutal behaviourof these countries
Post a Comment