இலஞ்சம் பெற்ற நீதிபதி பற்றிய தேடல் நீளுகிறது.....!
இலஞ்ச ஊழல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஹோமகம மாவட்ட நீதிபதி தொடர்பான தேடல்கள் மேலும் தொடர்கிறது என இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு குறிப்பிடுகிறது.
ஏற்கனவே அந்த நீதிபதி வழங்கிய வழக்குத்தீர்வுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமா? என இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆணையகத்தின் தலைவர் ஜகத் பாலபட்டபந்தி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், நிச்சயம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்டுள்ள மனுவை வைத்துக்கொண்டு அதனுடன் தொடர்புபடுத்தி ஏனைய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உயர் அதிகாரிகள் பற்றிய பல்வேறு மனுக்கள் நாளுக்கு நாள் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு வந்தவண்ணம் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், சில மனுக்களை தொடர்ந்து நடாத்த முடியாதவண்ணம் உள்ளன எனவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவிக்கிறது.
அவ்வாறே, மேலும் தேடல்களி்ல் ஈடுபடுவதற்காக வெகுவிரைவில் அதிகாரிகள் குழு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜகத் பாலபட்டபெந்தி குறிப்பிட்டார்.
ஆய்வுப் பகுதிக்கும் அதிகாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment