பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை அரசு நீக்குமானால் அதை நான் எதிர்ப்பேன்-டக்ளஸ் அதிரடி
இன்றையதினம்(05)ரில்கோ விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரித்தார், அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 13வது திருத்தச்சட்டம்தான் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வாக அமையும் எனவே அரசு ஒருபோதும் அதை நீக்காது. அவ்வாறு ஒருநிலை வருமானால் தாம் அதை முழுமனதாக எதிர்ப்போம் என்று அவர் தெரிவித்தார்.
வடமாகாணசபை தேர்தல் தொடர்பாக அவரிடம் வினவியபோது, வடமாகாண தேர்தலை நடத்துவதே ஜனாதிபதியின் நோக்கமாகவும் உள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர்மாதம் அதற்கான அறிவிப்பை அவர் அறிவிப்பார் என நாம் எதிர்பார்க்கின்றோம். வடமாணசபை தேர்தலுக்கு எதிர்ப்புத்தெரிவித்து தென்பகுதிகளின் முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் தாண்டி அரசாங்கம் இவ்வருடத்தில் தேர்தலை நடத்தும் என்பதே எமது முழுஎதிர்பார்ப்பாகவுள்ளது.
வடமாகாணசபைத்தேர்தலுக்கு ஆளும் கட்சியிலிருந்தே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தேர்தல் நடப்பது சாத்தியமா ? என கேள்யியெளுப்பியபோது, அவைகள் எல்லாம் ஒரு தடையாக ஒருபோதும் இருக்காது, எவ்வாறான தடைகள் வந்தாலும் தேர்தலை நடத்துவதில் அரசும் உறுதியாகவுள்ளது.
அரசு சார்பாக நான்கு பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் நான் தேர்தலில் அரசுடன் இணைந்தோ அல்லது தனித்தோ போட்டியிடுவேன்.
தேர்தலில் மக்கள் எனக்கு சரியான ஆணை வளங்குவார்களானால் ஜந்து வருடங்களுக்குள் வளம் கொழிக்கும் பகுதியாக வடபகுதியை நான் மாற்றுவேன்.
நான் தனித்தோ அல்லது அரசுடன் இணைந்தே ஏதோ ஒரு வகையில் முதலமைச்சர் வேட்பாளராக வருவேன் மிகுதியை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment