Friday, June 28, 2013

த.தே.கூ. தலைவர் சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரின் மனு உயர்நீதிமன்றத்தால் நிராகரிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், மற்றும் விஜித ஹேரத் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட ஆட்சே பனை மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஐந்து நீதியரசர்களை கொண்ட நீதியரசர் குழாம் த.தே.கூ. தலைவர் சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை மனுவை நிராகரித்தனர்.

முன்னாள் பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானம் செல்லுபடியற்றது என, மேன் முறையீட்டு நீதிமன்றம் அறித்திருந்தது. இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவேண்டுமென சட்டமா அதிபர் விசேட மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வாறு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட அனுமதிக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் ஆட்சேபனை மனுவென்றை முன்வைத்திருந்தனர். இந்த மனுவே இன்று உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment