தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதால் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா அந்த அமைப்பைத் தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கை, அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட போதே அதில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதி ஆதரவு வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாலேயே இந்த தடை நீடிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் விடுதலைப் புலிகளின் எச்சங்களை முற்றாக அழிப்பதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை பயன்படுத்துகின்றது. இதனால் தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்புகளை இலங்கையுடன் மட்டுப்படுத்தியுள்ளோம். என குறிப்பிட்டுள்ள அமெரிக்கா இலங்கை இராணுவத்தால் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஏற்று தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் போன்றவற்றுடன் இலங்கை தனது கடல்சார் எல்லைப் பாதுகாப்பில் தொடர்பில் கடந்த காலத்தில் இணைந்து செயற்பட்டுள்ளது என்றும் இது தொடர்ந்தும் நீடிக்கும் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment