"தீ" யினால் மசூதி முற்றாக சேதம்! இராணுவ வீரரின் கொலைக்கு பழிக்குப் பழியா?
இலண்டனில் கடந்த மே மாதம் 22 ஆம் திததி, இராணுவ வீரர் ஒருவர் புரட்சியாளர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இஸ்லாமியர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசு ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தக் கொலை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்நிலையில் நேற்று வடக்கு இலண்டனில், முஸ்வெல் ஹில் பகுதியில் உள்ள சமுதாய மையம் ஒன்று தீப்பற்றி எரிவதாகக் பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும் தீயினால் அங்கிருந்த மசூதி முற்றிலும் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தீயினால் அருகில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், அந்த கட்டிடத்தில் சோமாலிய வீரர்களுக்கான நல்வாழ்வு மையம் இயங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
எனினும் குறித்த கட்டிடங்களில் இருந்தவர்கள் பத்திரமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் அமைப்பின் ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கையில், முஸ்லிகளுக்கு இடையிலான எதிர்ப்பும் பெருகி உள்ளதாகவும், அதுகுறித்த கவனம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சோமாலியர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பாதுகாப்பும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்
0 comments :
Post a Comment