அடுத்த சுற்றிற்கு தெரிவாகும் வாய்ப்பை தக்கவைத்து இலங்கை!
இங்கிலாந்தில் நடைபெறும் செம்பியன்ஸ் கிண்ண தொடரின் முக்கிய போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்த சுற்றிற்கு தெரிவாகும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களை பெற்றது.
ஜொனதன் ட்ரொட் 76 ஓட்டங்களையும், ஜோ ரூட் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் லசித் மாலிங்க மற்றும் சமிந்த எரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பதிலுக்கு 294 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.1 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கையடைந்தது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குமார் சங்ககார ஆட்டமிழக்காது 134 ஓட்டங்களையும், நுவான் குலசேகர 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் என்டர்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளன.
இதற்கமைய புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 3ம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது. அடுத்த அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment