இந்தியாவின் வடபகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி! அரசாங்கம் முன்னெச்சரிக்கை வழங்கவில்லை மக்கள் விசனம்!
இந்தியாவின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர் வடையும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் உத்தரகாண்ட மாநிலத்தில் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் 40 ஆயிரம் பேர் மலைப்பகுதிகளில் தங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 60 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவில் மிகப்பெரிய இயற்கை அனர்த்தங்களை குறித்த பருவப்பெரய்ச்சி மழை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் வடபகுதியிலுள்ள புனித தளங்கள் பல முற்றாக சேதமடைந்துள்ளன. வரலாற்று சிறப்புவாய்ந்த பகுதிகளும் வெள்ளத்தில் அழிவடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சீரற்ற காலநிலை தொடர்பில் அரசாங்கம் முன்னெச்சரிக்கை வழங்க தவறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment