குற்றவாளிகளை கைதுசெய்யாமல் ஏன் பிச்சைக்காரர்களை கைது செய்துகின்றீர்கள்? - நீதவான்
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரியும் போது, அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் பிச்சைக்காரர்களை கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்வது ஏன் என மாளிகாகந்த நீதவான் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாளொன்றுக்கு 15,000 ரூபா வருமானத்தை பிச்சையெடுப்பதன் மூலம் பெறும் பிச்சைக்காரர் ஒருவரை பொறளைப் பொலிஸார் கைதுசெய்து மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போதே நீதவான் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
பொறளை சுரங்கப்பாதையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுத்ததாக பொறளை பொலிஸார் பிச்சைக்காரர் ஒருவரை கைது செய்ததாகவும் காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை பிச்சை எடுத்ததில் இந்நபர் 1500 ரூபாவை வருமானமாக பெற்றுள்ளதாகவும் பொறளை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
4 comments :
A good question.
Inefficient and inability useless police forces of Sri Lanka.
Shame!
குற்றவாளிகள் அரசியல்வாதிகள் அல்லது பணக்காரர்கள். எனவே பிச்சைக்காரர்களை கைது செய்வது பிரச்சனை இல்லை. முன்னர் போலீசு மட்டும்தான் லஞ்சம் வாங்கினாங்க. இப்ப நீதிபதிகளும் லஞ்சம் வாங்குறாங்க.......
குற்றவாளிகள் அரசியல்வாதிகள் அல்லது பணக்காரர்கள். எனவே பிச்சைக்காரர்களை கைது செய்வது பிரச்சனை இல்லை. முன்னர் போலீசு மட்டும்தான் லஞ்சம் வாங்கினாங்க. இப்ப நீதிபதிகளும் லஞ்சம் வாங்குறாங்க.......
The matter between a begger and a sympathiser is beyond the level of human thinking power,but free movement of the culprits and criminals is the big negligience of
of the police force,which has a duty to protect the society,as said by the Hon.Judge it is true culprits and criminals are danger to the society and they are on the free move beggers matter just only a matter of discipline.
Post a Comment