அம்பாறை திகவாபி பௌத்த தேவாலயத்தில் மோதல் விகாரையின் விகாராதிபதியும் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை இடம் பெற்றது. பௌத்தர்களின் பொசன் களியாட்ட விழா அம்பாறை நகரில் நடாத்த அனுமதி கோரி அனுமதி வழங்கப்படாது போக நேற்று இரவு திகவாபியில் நடை பெற்றது. இதனை ஏற்பாடு செய்தவர் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகே ஆகும் . இதனை தடுத்து நிறுத்த அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முயற்சித்துள்ளார் எனினும் திட்டமிட்டபடி பொசன் களியாட்ட விழா திகவாபி மைதானத்தில் நடை பெற்று முடிந்துள்ளது.
எனினும் இன்று காலை அந்த பிரதேசத்துக்கு டிபன்டர் வாகனத்தில் சென்ற ஐந்து குண்டர்கள் எனக் கூறப்படும் சரத் வீர சேகரவின் அடியாட்கள் பௌத்த ஆலய வளவில் மது அருந்திய போத்தல்களை தாங்களே போட்டுவிட்டு அதனை தவறான வழிக்கு திசை திருப்ப வீடியோ படம் எடுத்துள்ளனர். இதனை கண்ட சிங்கள பொது மக்கள் இவர்களை தாக்க முற்பட்டுள்ளதுடன் விடயத்தை விகாராதிபதியிடமும் முறையிட்டுள்ளனர். உரிய இடத்துக்கு வந்த விகாராதிபதியை குண்டர்களில் ஒருவர் தள்ளிவிட்டதையடுத்து அவ்விடத்தில் கலவரம் மூண்டுள்ளது. குண்டர்களை பொது மக்கள் தாக்கத் தொடங்கியதும் அந்த ஐவரும் ஓடித் தப்ப முயற்சித்தும் பொது மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாதுகாப்பு தேடி திகவாபி பொலிஸாரிடம் ஓடிச் சென்றதும் பொது மக்கள் பின் தொடர்ந்து அவர்களை வெளியேறாதவாறு இன்னும் ரகளை இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக திகவாபி விகாராதிபதி தமணைப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு சற்று முன்னர் குண்டர்கள் ஐவரும் அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment