விசாரணை அறிக்கை துணைவேந்தரிடம் கையளிப்பு!
யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்றுவருகின்ற தென்னிலங்கை மாணவர்களுக் கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை துணைவேந்தரிடம் கையளித்துள் ளதாக பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலை வரும் மாணவர்களின் சிரேஷ்ட ஆலோசகருமான ப.புஷ்பரட்ணம் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவருகின்ற முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ஆம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாகக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்றுவருகின்ற தென்பகுதியைச் சேர்ந்த 3ஆம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்குமிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரியகுளத்தில் அமைந்துள்ள விகாரை முன்றலில் மோதல் சம்பவம் ஒன்றும் யாழ் பல்கலைகழக வாயிலுக்கு முன்பாகவும் நடைபெற்றது.
முதலாம் வருட மாணவர்கள் 3ஆம் வருட மாணவர்களுக்கு கீழ் படிவதில்லை என்ற முரண்பாட்டினால் இரு குழுக்களுக்கிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் எனவே இதற்கமைய விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.
அத்துடன் இக் கோஷ்டி மோதல் சம்பவத்துடன் சம்மந்தமானவர்கள் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணை முடிவுகளை துணை வேந்தர் வசந்தி அரசரெட்ணத்திடம் கையளித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment