பிரபாகரனின் துப்பாக்கியில் நம்பிக்கை வைத்து, அன்று பொதுமக்களை வாக்களிக்க வேண்டாமென உத்தரவிட்டவர்களை நாம் இன்று .....!
அரசாங்கம் தேர்தலொன்றுக்கு தயாராகும்போது, எதிர்க் கட்சி அதனை நிராகரிப்பது, வியப்புக்குரியதாகும் எனவும், துப்பாக்கியின் மீது மாத்திரம் நம்பிக்கை வைத்திருந்த வட பகுதியின் சிலரை, ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கு, அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குண்டசாலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலை பற்றி எந்தவித நம்பிக்கையும் வைத்திராமல், பொதுமக்களை வாக்களிக்க வேண்டாமென உத்தரவு பிறப்பித்து பிரபாகரனின் துப்பாக்கியில் மாத்திரம் நம்பிக்கை வைத்து படுகொலைகளை புரிந்த பிரபாகரனின் நெருங்கிய சகாவான தயா மாஸ்டர், இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ளப்போகின்றார் என அமைச்சர் கெஹெலிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்காகவே முயற்சிக்கின்றோம் எனவும், இனவாதத்தை ஒழித்து, குல பேதத்தை அழித்து, சகல பேதங்களையும் ஒதுக்கி, அனைத்து இலங்கையர்களும் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றோம் எனவும், இதற்கு பலமான அடித்தளம் இட நாம் முயற்சிக்கின்றோம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
0 comments :
Post a Comment