ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நாளை!
வெலிகம ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நாளை (29) பிற்பகல் 4 மணிக்கு வெலிகம நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஹப்ஸா அறபுக் கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் அஷ்ஷெய்க் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வெலிகம நகரபிதா அல்ஹாஜ் ஹுஸைன் ஹாஜியார் முஹமட் கலந்துகொள்ளவுள்ளார்.
காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) சிறப்புரையாற்றவுள்ள இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் தலைவர் காலித் பின் ஸாலிஹ் அத்தாவூத் கலந்துகொள்ளவுள்ளார்.
நிகழ்வில் பட்டம் பெறவுள்ள மௌலவியாக்கள்:
ஆயிஷா அமீன் (வெலிகம), பஸ்னா பாயிஸ் (திக்குவல்லை), ஷிஹ்னாஸ் பாயிஸ் (திக்குவல்லை), ஸாஜிதா பௌஸுல் ஜெஸீம் (திக்குவல்லை), நுஸ்ரா அலி (திக்குவல்லை), ரிம்ஸா ஹுஸைன் (வெலிகம), அஸ்மா ஸரூக் (கிந்தோட்டை), ஸிஹ்னா அப்துல் ஹபீழ் (வெலிகம), பஸ்னா குல்ஸார் (தர்கா நகர்), பஸ்னா முஸம்மில் (தர்காநகர்), பர்ஸானா பாரிஸ் ( களுத்துறை), சப்னா நஸார் (வெலிகம), சனப் யெஸூர் (வெலிகம), ஸல்மா முஹம்மத்
(திக்குவல்லை)
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment