சட்ட ரீதியற்ற கருக்கலைப்புக் குற்றத்திற்காக கலாநிதி சிரில் ரந்தெனியவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
பெண்ணொருவருக்கு கருக்கலைப்புச் செய்வதற்காக வேண்டி மருந்துகள் வழங்கிய குற்றத்திற்காக, வைத்தியக் கலாநிதி சிரில் ரந்தெனிய மற்றும் அவரது தாதிக்கு எதிராக சட்ட மா அதிபரினால் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு எதிராக கருக்கலைப்பு நிலையம் ஒன்று நடாத்திச் செல்வதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கர்ப்பவதியான பெண் பொலிஸ் அதிகாரிக்கும் கருக்கலைப்புக்கான மருந்துகள் வழங்கப்பட்டதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருக்கிறார்.
த சொய்ஸா மகளிர் மருத்துவமனை மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கலாநிதி சிரில் ரந்தெனியவு மாத்திரமன்றி அவரிடம் தாதியாகப் பணிபுரிந்த காலோச்சனா மெனிக்குமாரி என்பவருக்கெதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment