Saturday, June 1, 2013

இந்திய மருத்துவ மனையில் இடம்பெற்ற கொடுமையா? சிறுமியின் உள்உறுப்புகள் நீக்க.... பெற்றோர்!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோக் சிங் என்பவர், இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார் இன்நிலையில் இவர் கடந்த ஏப்ரல் மாதம், பஞ்சாபில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக இந்தியா வந்திருந்தார். வந்த இடத்தில், அவரது 10 வயதுடைய மகள் குர்கிரன் கவுர், நீர்சத்து குறைந்து, வறட்சி நோயால் பாதிக்கப்பட்டாள். இதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, அங்குள்ள மருத்துவ ஊழியர் மருந்து ஒன்றினை ஊசி ஒன்றினை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்குள், குறித்த சிறுமி இறந்துவிட்டார்

அதனையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிறுமியின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்ற பெற்றோர்கள், மகளுக்கு இறுதிக் கிரிகைகள் செய்வதற்கு முன் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் மற்றொரு பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் குறித்த சிறுமியின் உள்உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பிரிட்டிஷ் கவுன்சிலர் மூலம், சிறுமியின் உடல் உறுப்புகளைப் பெற்றுத்தருமாறு இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

தனது மகளின் இறுதிக்கிரிகைகள் முழுமை நடைபெறவேண்டுமெனில், அவளது உறுப்புகள் அனைத்தும் வேண்டும் என்று குறித்த சிறுமியின் தெரிவித்துள்ளார். தன்னுடைய பெண்ணிற்கு செலுத்திய ஊசிமருந்து குறித்த விபரத்தை டாக்டர்கள் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் மற்ற மருத்துவ செலவுகள் எதற்கும் பணம் வாங்கவில்லை என்றும் குறித்த சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குர்கிரனின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுடைய தவறினை மறைக்க மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு செய்திருக்கலாம் என்று பெற்றோர் கருதுகின்றனர்.

1 comment:

  1. This incident cannot be a master stroke to the medical history of India.It was shameful the way the particular girl was treated in the Indian hospital

    ReplyDelete