முஸ்லீம் தேசத்திலிருந்து முதலாவது பெண் போர் விமானி!
இஸ்லாமியக் குடியரசான பாகிஸ்தான் நாட்டில் இதில் 26 வயது நிரம்பிய ஆயிஷா ஃபரூக் என்ற இளம்பெண் அனைத்துப் பயிற்சிகளையும் முடித்து பாகிஸ்தானின் விமானப் படையில் ஒரு பெண், போர் விமானியாகப் பணிபுரியும் தகுதியைப் பெற்றுள்ளார்.
பெண்கள் குறித்த கட்டுப்பாடுகள் பாகிஸ்தானில் தளர்ந்து வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூரைச் சேர்ந்த ஆயிஷாவிடம் தனியாக ஒரு பெண் போர் விமானத்தில் பணியாற்றும் அனுபவம் தொடர்பாக கேட்டபோது எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை என்றும் ஆண்கள் செய்யும் அனைத்து செயல்களையும் தானும் செய்வதாகவும், துல்லியமாக வெடிகுண்டுகளை வீசுவதாகவும் பதில் அளித்தார்.
அது மட்டுமல்லாது கடந்த வருடங்களில், மொத்தம் 19 பெண்கள் பாகிஸ்தான் விமானப் படையில் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றுள்ளதுடன் இவர்களுள் 6 பேர் போர் விமானப் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment