புத்திசுவாதீனமற்ற அரசியல்வாதிகள் எம்மை விமர்சிக்கின்றனர்- சீறுகிறார் முருகேசு சந்திரகுமார்
மக்களுக்காக ஒன்றும் செய்யாத சில அரசியல்வாதிகள் மக்களின் வாழ்விற்குத்தேவையான அரசியலை முன்னெடுக்கும் எங்களை புத்திசுவாதீனமற்றநிலையில் கொச்சைத்தனமாக விமர்சித்து வருகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று (14) சிற்றூழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
கடந்த சில தினங்களுக்கு முன் 1110 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதத்தில் வடமாகாணத்தில் நீண்டகாலமாக வேலைவாய்ப்பற்றிருந்த 4800 பட்டதாரிப் பயிலுனர்களுக்கு வேலைவாய்பபு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களின் தொண்டர் ஆசிரியர்கள் 540 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. ஏனைய மாகாணங்களில் எம்மைவிட அதிகளவான வேலைவாய்ப்பற்றவர்கள் இருந்தபோதும் வடமாகாணத்தில் விசேட அடிப்படையில் கடந்த எட்டுமாத காலத்துக்குள் 9000 போருக்கு மேலதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக பெருமளவிலான வேலைவாய்ப்பற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றிவைக்க எமது அமைச்சர் (டக்ளஸ்) பெரும்பாடுபட்டு உழைத்துள்ளார். மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், இன்று அவரது அரசியல் நிலைப்பாட்டை சில புத்திசுவாதீனம் இல்லாதவர்கள் கொச்சைத்தனமாக விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு விமர்சித்துவருபவர்களால் இந்த 9000 பேரில் ஒருவருக்காவது வேலை வாய்ப்பினை பெற்றுத்தர முடிந்ததா? நிச்சயமாக இல்லை! இருப்பவர்களையும் வெளியே அனுப்பத்தான் அவர்களால் முடியும்..
எனவே, நீங்கள்தான் யோசிக்கவேண்டும் இதில் யார் உங்களுக்குத் தேவையானவர்கள் என்று!! நேற்றுவரை நீங்கள் வேலைவாய்ப்பற்று இருந்ததைப்போலவே, உங்களுக்குப் பின்னாலும் இன்னும் எத்தனையோபேர்கள் இருக்கின்றனர? அவர்களுக்கும் நல்வதொரு எதிர்காலத்தைப் பெற்றுத்தரவே நாம் உழைத்து வருகின்றோம் எனவே, நீங்களும் எம்மோடு கை கோர்தது இணையும் போதுதான் இந்தமாகாணம் வாழ்விலும் அபிவிருத்தியிலும் நல்லதொரு முன்னேற்றத்தினை பெற்றுக்கொள்ளமுடியும்! ஆகவே, இதற்காகவே நீங்கள் உளைக்கவேண்டும் என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
1 comments :
This what they were doing for decades
and decades making silly comments and remaining in their seats was their policy even now they do the same.People need social and political reforms to have a peacful and prosperous life.Dog can bark at the moon,but moon remains peacefully.
Post a Comment