தன்சானியா மற்றும் சீஷெல்ஸ நாடுகளுக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் ஆரம்பம்! இந்த இரு நாடுகளும் தான் .......!
ஜனாதிபதியின் தன்சானியா மற்றும் சீஷெல்ஸ் நாடு களுக்கான 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஜனாதிபதி, தன்சானியாவின் ஜூலியஸ் நயரேரே சர்வதேச விமான நிலையத்தை, சென்றடைந் துள்ளார். தன்சானியா ஜனாதிபதி ஜகயா ரிக்கோ கிக் வெட்டே தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்றனர்.
ஜனாதிபதி இந்த விஜயத்தின்போது, தன்சானிய ஜனாதிபதி ஜகயா ரிசோர்வ் கிக்வத்தே மற்றும் சீஷெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலிக்ஸ் மிச்செல் ஆகியோருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அண்மைக்காலமாக இந்த இரு நாடுகளுடனும் மிக நெருங்கிய உறவை பேணி வருகிறது. அரச தலைவரின் விஜயம், சீஷெல்ஸ் ஜனாதிபதி கடந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், தமது நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தன்சானியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் சர்வதேச கூட்டங்களின்போதும், இலங்கைக்கு ஆதரவு வழங்கும் ராச்சியங்களாகும். 2009ம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமை பேரவையின் 2வது விசேட அமர்வின்போது, சீஷெல்ஸ் இராச்சியம், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.
அத்துடன் இவ்வருடத்தில் பொதுநலவாய அமைச்சர்களின் செயற்பாட்டு குழு கூட்டத்தின்போது, 2013ம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை வேறொரு நாட்டில் நடாத்த வேண்டுமென, ஒரு சில நாடுகள் தெரிவித்திருந்த போதிலும், இம்மாநாட்டை நவம்பர் மாதம் இலங்கையில் நடாத்த வேண்டுமென, தன்சானியா பூரண ஆதரவை வழங்கியிருந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்சானியாவின் பிரதான நகரான தாரெஸ் ஸலாமில் நடைபெறவுள்ள சர்வதேச புரிந்துணர்வு விவாதத்திலும், ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது
0 comments :
Post a Comment