பத்து மாதக் குழந்தையென்று கிணற்றில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாயிடம் விசாரணை!
"குழந்தையை தொட்டிலில் உறங்கச் செய்து சமையலில் ஈடுபட்டிருந்தேன் பின்னர் பார்த்த போது குழந்தையைக் காணவில்லை"
மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் பத்து மாதக் குழந்தையை கிணற்றில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயார் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருளானந்தன் அனுஷன் என்ற குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை அயல் வீட்டுக்கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. குழந்தையின் மரணம் தொடர்பாக தந்தை மற்றும் அயலவர்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
"சம்பவ தினம் குழந்தையை தொட்டிலில் உறங்கச் செய்து சமையலில் ஈடுபட்டிருந்தேன். பின்னர் தொட்டிலைப் பார்த்த போது குழந்தையைக் காணவில்லை" எனவும், அயலவர் மற்றும் பொலிஸாரின் உதவியோடு தேடிய போது அயல் வீட்டுக்கிணற்றில் சடலமாக எனது குழந்தையை காண முடிந்தது என தாயார் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனை மேற்கொண்டார் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment