விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பெற பொலிஸாருக்கு அனுமதி!!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் தொடர்ந்தும் வாக்கு மூலம் பெறுவதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸார் முன்வைத்த வேண்டுகோளுக்கு அனுமதி வழங்கும் வகையிலேயே கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
கோடீஸ்வர வர்த்தக மொஹமட் ஷியாமின் கொலை தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் வாஸ் குணவர்தனவிடம் தொடர்ந்தும் வாக்கு மூலம் பெறவேண்டியுள்ளதாகவும், இதற்காக சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திடம் வேண்டுகோளை முன்வைத்திருந்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட மேலதிக நீதவான், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக பொலிஸாருக்;கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment