கூட்டுக்குள்ளிருந்து கொலை மிரட்டல் விடுக்கும் பொலிஸ் மாஅதிபர்! உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் அறிக்கை!!
கொலைக் குற்றத்தின் பேரில் காவற்சிறையில் உள்ள கொழும்பு வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவினால் தமக்கு உயிர்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக உதவிப் பொலிஸ் அதிகாரி அபசேக்கர குறிப்பிடுகிறார்.
விசாரணையின் முடிவு பற்றி கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம். சஹாப்தீனிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துவிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணைகள் மேற்கொண்டு கைதுசெய்யும் வேளையிலேயே அவர் அமர்ந்திருந்த நாற்காலியைத் பின்பக்கமாகத் தள்ளிவிட்டு, ‘நீங்கள் இந்த வேலையைச் செய்வீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்துகொள்ளுங்கள்.... உங்களால் எந்த நாளும் என்னை உள்ளே வைத்திருக்க முடியாது... ஷானி நான் ஒரு கொலைகாரன். நான் வெளியே வந்து உங்களுக்கு நல்ல பாடம் புகட்டுகிறேன்...’ என்று குறிப்பிட்டதாக அவரது அறிக்கையில் உள்ளது.
இந்தக் கூற்றின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்த அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் இந்த உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸ் பிரிவின் உதவிப் பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேக்கர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment