கலாச்சார சீரழிவைத் தடுக்க யாழில் புதிய நடிவடிக்கை விரைவில்!!
கடந்த காலங்களைவிட யாழ்ப்பாணத்தில் தற்போது கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துவருவதாகவும், இவ்வாறு கலாச்சார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறையிடுவதற்கென தனியான பிரிவு ஒன்று விரவில் ஆரம்பிக்கப்படும் என்று யாழ் பொலிஸ் நிலைய தலைமைப்பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்துள்ளார்
குறிப்பாக தகுந்த காரணங்கள் இன்றி தனியார் விடுதிகளில் 18வயதுக்கு குறைந்தவர்களை அனுமதித்தல்,
அனுமதியில்லாமல் இயங்கும்விடுதிகள்,பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள்,அனுமதியின்றி இயங்கும் மதுபானநிலையங்கள் தொடர்பாக தாம் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், இவ்வாறாக கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் தொடர்பில் மக்கள் அறியும் பொருட்டிலோ, இவ்வாறான தீங்குகளுக்கு நீங்கள் உட்பட நேரிடும் பொழுதிலோ எந்த வித தயக்கமும் இன்றி பொலிஸில் முறையிடலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment