Friday, June 14, 2013

ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதில் சந்தேகம் உள்ளது: முகம்மட் முசம்மில்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாக தெரிவித்ததுடன் அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளதென இன்று (14.06.2013) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவுப் ஹக்கீம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் தமிழ்ச்செல்வன் கொலைக்கு இலங்கை பாராளுமன்றில் அனுதாபம் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர் ஏறாவூர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் முஸ்லிம்களை புலிகள் சுட்டுக் கொலை செய்யும் போது இந்த ஹக்கீம் எங்கு போனார் எனவும் கிழக்கில் முஸ்லிம்களது காணி சொத்துக்களை சூறையாடும்போது எங்கு போனார் என்றும் அவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.

ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவராக செயல்படுவதாகவும் அவர் கிழக்கை மீண்டும் வடக்குடன் இணைக்கும் வேலையே அடுத்த வருட முற்பகுதியில் செய்வார் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முசம்மில் தெரிவித்தார்.

3 comments :

Anonymous ,  June 14, 2013 at 7:07 PM  

நேர்மை, நீதியாக மக்களுக்கு சேவை செய்து நற்பெயர் எடுக்க முடியாத சாக்கடை அரசியல் வாதிகள், ஒருவரை ஒருவர் குறை, குற்றம் சுமத்தி, விழுத்தி தங்களை தாங்களாகவே உயர்த்திக்கொள்ள முயல்கிறார்கள். இது அந்தக் காலம் அல்ல. பதவிகளுக்கும், பணத்திக்கும் நீதியற்ற அரசுக்கு விலைபோகும் சுயநல அரசியல் வாதிகளை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

ybms ,  June 15, 2013 at 6:05 AM  

Rauff hakeem ponathu irukkattum neengal enge poneerhal

Anonymous ,  June 15, 2013 at 7:20 AM  


அப்போ ரவூப் ஹக்கீம் போனது இருக்கட்டும், நீங்கள் எங்கே போனீர்கள்?
நல்ல கேள்வி. இப்போ எல்லோருக்கும் நன்றாக புரிகிறது உங்கள் கபடத்தனம்.

Al Hakeem.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com