புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்- ஜீ.எல்.பீரிஸ்
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவுஸ்திரேலியா விலிருந்து நாடு கடத்தப்படும் அனைத்து இலங்கையர் களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியா நோக்கி படையெடுப்பதாகவும் இவர்களுக்கு இலங்கையில் எந்தவிதமான ஆபத்து கிடையாது என்ற காரணத்தினாலேயே அவுஸ்திரேலியா அவர்களை நாடு கடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவைத் தொடர்ந்தும் பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் தஞ்சமடைந்து வருவதாகத் தெரிவித்த அவர் இலங்கையில் பூரண சமாதானம் நிலவி வருவதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் போது உண்மை நிலைமைகளை உலகிற்கு உணர்த்த முடியும் எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment