காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வட மாகாண சபை தேர்தல் வேண்டாம்! கையெழுத்து வேட்டை!
காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வட மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டாம் என வலியுறுத்தி மக்களிடம் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கை இன்று களனி ஸ்ரீ புஞ்ஞானந்த பௌத்த மத்திய நிலையத்தில் மத அனுஷ்டானங்களுடன்அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இக்கையெழுத்து பெறும் நிகழ்வு களனியில் ஆரம்பமாகி கடவத்தை, யக்கல, பஸ்யால, வரக்காபொல, பொல்கஹாவெல, குருநாகலை வரை சென்று அங்கு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும், இவ் ஊர்வலம் செல்லும் அனைத்து நகரங்களிலும் மக்களிடம் கையெழுத்துகள் பெறப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கையெழுத்து பெறும் நடவடிக்கையானது நாட்டுக்காகச் செய்யும் மாபெரும் சேவை என்றும் நாடு பூராகவும் சென்று வட மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக கையெழுத்து பெற்று அதனை ஜனாதிபதியிடம் கையளிப்பதே தங்களது நோக்கம் என்றும் தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment