தமிழ் மக்களை தொடர்ச்சியாக அழைக்கும் இலங்கை அரசாங்கம்!
வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் தமிழ் மக்ககளை மீண்டும் தாயகம் திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத் துள்ளதுடன், இவ்வாறு தாயகம் திரும்பும் மக்களுக்காக அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யுத்தம் இடம்பெற்ற காலக்கட்டத்தில் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்த வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ந்தும் அந்நாடுகளில் வசித்து வருகின்றனர்.
பயங்கரவாதம் கூண்டோடு அழிக்கப்பட்டதன் பின்னர் தற்போது வடக்கு, கிழக்கில் அமைதி நிலவுகின்றது. பொருளாதார ரீதியிலும் அபிவிருத்தியடைந்துள்ள இப்பிரதேசங்களில் மக்கள் வாழ்க்கை உண்மையாக வழமைக்கு திரும்பியுள்ளது.
வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்த பெரும்பாலோனோர் மீண்டும் தாயகம் திரும்பி, தமது சொந்த இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அகதிகளாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மக்கள் தொடர்ந்தும் அவ்வாறு தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அகதிகளை மீண்டும் தாயகம் திரும்புமாறு அழைப்பு விடுத்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment