Wednesday, June 26, 2013

அரை நிர்வாணத்துடன் டுனீசிய நாட்டு பிரதமரின் வாகனத்தொடரணி மீது பாய்ந்து பெண்கள் அட்டகாசம்!

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸில் வைத்து டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட்டின் வாகனத் தொடரணி மீது பாய்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரை நிர்வாணப் பெண்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது சக பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வலியுறுத்தி உக்ரேன் நாட்டு பெண்கள் இயக்கமான "பெமென்" இயக்க உறுப்பினர்களே இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத் துள்ளனர்.



பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட் அங்கிருந்து திரும்பும் போதே அவரது வாகனத் தொடரணி மீது இரண்டு பெண்கள் பாய்ந்துள்ளனர். இவர்கள் மேலாடையின்றி இருந்ததுடன், அண்மையில் கைதுசெய்யப்பட்ட பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வாசகங்களை உடலில் எழுதியிருந்தனர்.

வாகனத்தொடரணி மீது பாய்ந்த இவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து இழுத்து உடனடியாக அவ்விடத்தை விட்டு அகற்றியுள்ளனர். உலகின் கவனத்தினை இலகுவாக ஈர்க்கும் பொருட்டு 'பெமென்' இயக்கத்தினர் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Editorial நீங்கள் தரும் கூடுதலான செய்திகள் ஏனைய தளங்களில் ஏற்கனவே வெளிவந்தவையே... தலைப்பை மாத்திரம் மாற்றுரிங்க.. உங்கள் அதிகம் பேர் வருகைதரும் உங்கள் தளத்திற்கு இது பேரைக் கெடுக்குமல்லவா? வீரகேசரி, நிவ்ஸ்1நிவ்ஸ, ரிதம், ... நிறையவற்றில் உள்ள அதே செய்தி... உதாரணத்திற்கு //தமது சக பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வலியுறுத்தி உக்ரேன் நாட்டு பெண்கள் இயக்கமான "பெமென்" //என்பதைத் தேடிப்பாருங்கள்... எடிட்டோரிஅல் விளங்கும்... உங்கள் தளத்து அபிமானிகள் நாங்கள்...

    ReplyDelete