வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தோரின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த குறைநிரப்பு வாக்காளர் இடாப்பொன்று தயாரிப்பு!
வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள சட்ட மூலமானது வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவே அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரகாரம் இடம்பெயர்ந்த மக்களுக்கென குறைநிரப்பு வாக்காளர் இடாப்பொன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த ஒரு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்டு 2009 - 2012 காலப்பகுதியில் வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல் தற்காலிகமாக இடம்பெயர்ந்து வேறு ஒரு மாவட்டத்தில் தங்கியிருந்தமையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்தச் சட்டமூலத்துக்கு அமைய இடம்பெயர்ந்து தற்காலிகமாக ஒரு இடத்தில் தங்கியுள்ளவர்கள் தமது சொந்த மாவட்டத்திற்குச் சென்று வாக்களிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment