இன்று வீதியில் நடக்கவும் முடியாதவர்களே தூதுவர்களாக இருக்கின்றனர்! - ராவண பலய
இன்று தூதுவர்களாக சேவைபுரியக்கூடியவர்கள் வீதியில் நடக்கவும் முடியாதவர்கள், தள்ளாடுபவர்கள். அதனால், வீதியில் நடந்து செல்ல முடியுமான புத்திசாதுர்யமானவர்களை தூதுவராலயங்களுக்கு நியமிக்குமாறு தாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக ராவண பலய அமைப்பின் இத்தெகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார்.
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பியர் வகையொன்றில் விளம்பரப் பலகை வைப்பதற்காக சீகிரியா தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதனை அவசரமாக நிறுத்துமாறு எச்சரிக்கைவிடுத்து ஜப்பான் அரசாங்கத்திற்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தை, இலங்கையில் இயங்கும் ஜப்பான் தூதுவராலயத்திற்குக் கையளித்துவிட்டே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
'வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க சீகிரியா உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகின்றது. அது பாதுகாக்கப்பட வேண்டிய, ஆச்சரியம்மிக்க இடமாகும்'
அது எங்களுக்கு மிகவும் தேவைப்பாடானது. சீகிரியாவைப் பாதுகாப்பது இலங்கையர் அனைவரினதும் பொறுப்பாகும். அதற்குக் களங்கம் விளைவிக்கும் நாடு எதுவாகவிருப்பினும் அதற்கெதிராக ராவண பலய தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கும். ராவண பலய அமைப்பினராகிய நாம், இலங்கையராகிய நாம் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இதற்கெதிரான நடவடிக்கைளை வெகுவிரைவில் ஏற்பாடு செய்யுங்கள்' என்பதே என்றும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment