பிரிட்டனுக்கு செல்லும் இலங்கையரிடமிருந்து பிணை அறவிடும் திட்டத்தை நீக்க கோருகின்றார் கருணாதிலக்க.
பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கையர் களிடம் பிணை அறவிடும் திட்டத்தை இரத்து செய்யுமாறு அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர் பிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மற்றும் இலங்கைக்கான பிரித் தானிய தூதுவர் ஆகியோருக்கு இடையே நடைபெற வுள்ளது.
பிரித்தானியாவுக்கு செல்லும் இலங்கையர்களிடம் பிணை அறவிடும் திட்டத்தை நீக்கிக்கொள்ளுமாறு இதன்போது வேண்டுகோள் விடுப்பதற்கு எண்ணியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித் துள்ளார்.
பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களிடமிருந்து பிரிட்டனுக்கான முன் விசாபிணையாக 3000 டொலர்களை அறவிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 6 மாத பயண விசாவில் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் 3000 டொலர்களை பிணைத் தொகையாக அறவிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் பிணைத்தொகை விசா காலத்தையும் மீறி தங்குவோரிடம் அபராதமாக ஈட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment