Thursday, June 6, 2013

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மூளை எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை!- பொன்சேகா

1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கதுங்கவின் வலது கண் முழுமையாக செயலிழந்திருந்த போதிலும் அவருடைய மூளை எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் வைத்திய நிபுணராக கடமையாற்றிய சரித் பொன்சேகா சாட்சியமளித்தார்.

1999ல் கொழும்பு மாநகர சபைத்திடலில் டிசெம்பர் 18 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி பிரசாரக்கூட்டத்தின் போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பந்தமன வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

குறித்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல் வழக்கில் வேலாயுதன் உதயராசா ரகுபதி சர்மா, மற்றும் சந்திரா சர்மா ஆகியோர் மீதே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜி.ஜெயக்குமார், சாட்சியமளித்த கண் வைத்திய நிபுணரின் சாட்சியத்தை நான் குறுக்கு விசாரணை செய்யவிரும்பவில்லை என்று நீதிமன்றுக்கு தெரிவித்தார். வழக்கு விசாரணையை யூன் மாதம் 19 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். குறித்த தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட 110 பேர் காயமடைந்ததுடன் 31 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com