Saturday, June 29, 2013

சுவிஸ் வங்கி ஒன்றில் உள்ள புலிகள் வைப்பு செய்துள்ள ஒரு பில்லியன் டொலர் சொத்துக்களை பெற அரசு நடவடிக்கை!

புலிகளின் இராணுவப் பிரிவின் தலைவர் ஒருவர் தெரிவித்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுவிஸ் வங்கியொன்றில் புலிகள் வைப்பு செய்துள்ள ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு புலனாய்வு சேவைகளின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பினர் சேகரித்த நிதி மற்றும் சொத்துக்களே இந்த சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் குறித்த இந்த வங்கியின் பெயரையும் இலங்கை அரசாங்கம் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் சுவிஸ் புலனாய்வு அமைப்பின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக உயர்மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவிப்பதுடன் கொழும்பில் புலிகளுக்கு சொந்தமாக இருந்த 90 மில்லியன் ரூபா பெறுமதியான வங்கி கணக்குகள் இரண்டு ஏற்கனவே முடக்கப்பட்டடை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இப்ப விளங்குதா புலன்பெயர் மக்களே. ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் வாடும் தமிழ் மக்களுக்கு இதுவரைக்கும் ஒரு டாலர் கூட கொடுத்து உதவ முன் வந்ததில்லை.
    ஆனால், புலிகளின் இராஜ வாழ்வுக்கும், ஆயுதங்கள் வாங்கி அழிவு போராட்டத்தை முடிவிலாமல் தொடரவும், வெளிநாடுகளில் உங்கள் இருப்புக்களை காப்பாற்றவும் அள்ளி, அள்ளி கொடுத்து, கடைசியில் உனக்கும் இல்லை, அவனுக்கும் இல்லை, எமக்கும் இல்லை, ஆனால் எல்லாம் எதிரியாக இருந்தவர்களுக்கே இலகுவாக போய் சேரவுள்ளது.
    நீங்களும் மனிதர்களா? நீங்கள் உண்மையான தமிழ் பற்றுள்ளவர்களா? உங்களுக்கு ஏன் தமிழீழம் வேண்டியிருந்தது? உங்கள் மனச்சாட்சியை தொட்டு கேளுங்கள்!
    சுய நலத்தை விட்டு, இனியாவது எஞ்சியுள்ள தமிழ் மக்களுக்கு உதவி செய்து உங்கள் பாவங்களை கழுவி, புண்ணியம் செய்யுங்கள்.
    Vannian

    ReplyDelete