பிரகீத் எக்னெலிகொட எமது நாட்டில் இல்லை! - பிரான்ஸ் உயர்ஸ்தானிகராலயம்
'இலங்கையில் 2010ல் காணாமல்போன 'லங்கா ஈ நியூஸி'ன் செய்தியாசிரியரும், ஊடகவியலாளருமான பிரகீத் எக்னெலிகொட எமது நாட்டில் இல்லை. அதற்கான எந்த ஆதாரமும் பதிவுகளும் எம்மிடமில்லை' என்று இலங்கைக்கான பிரான்ஸ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ, ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன பிரான்ஸில் பிரகீத் எக்னெலிகொடவை தனக்கு அறிமுகப்படுத்தியதாக பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் ஊடகங்களில் பலத்த சர்ச்சையை குறித்த விடயம் தோற்றுவித்திருந்தது.
இதனிடையே, குறித்த கூற்று முழுமையான பொய் என்று ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே, தமது நாட்டில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வசிப்பதற்கான எந்த பதிவும் இல்லை என்று பிரான்ஸ் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment