கிளிநொச்சி கல்விக் கண்காட்சியை பார்வையிட நிரம்பி வழியும் பார்வையாளர்கள்!
வடக்கு மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்குடன் கலை மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கல்விக் கண்காட்சியை இன்று(28.06.2013) யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அராசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
காலை 9மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா , கிளி.மத்திய கல்லூரி அதிபர், வடமாகாண பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
இக் கல்விக் கண்காட்சியில் கிளி.மாவட்டம் மட்டுமல்லாது தென்பகுதியின் சில பாடசாலைகளும் கலந்து கொண்டுள்ளதடன், பல்கலைக்கழக மாணவர்களின் காட்ச்சிக்கூடம், இராணுவத்தினருடைய காட்ச்சிக்கூடம், கடற்படை காட்ச்சிக்கூடம், வமானப்படை காட்ச்சிக்கூடம் என பலதரப்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால் இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்கென தென்னிலங்கையச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
எனவே, இக்கல்விக் கண்காட்சி தென்பகுதி மற்றும் வடபகுதி மாணவர்களிடையே அறிவுப் பரிமாற்றம், நட்பு ஆகியவற்றுக்கு தொடர்புப் பாலமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கண்காட்சியில் கலந்துகொள்பவர்களுக்கான தேனீர், சிற்றுண்டி, போக்குவரத்து என்பவற்றை கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் ஏற்பாடுசெய்துள்ளது.
கண்காட்சி இன்று மாலை 5மணி வர நடைபெறவுள்ளதுடன், நாளையதினமும்(29.06.2013) காலை 8மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறவுள்ளது.
0 comments :
Post a Comment