மருந்துகள் தொடர்பில் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்கள் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவை!
வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவு வதாக ஒரு சிலர் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்கள் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவை எனவும், வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப் பாடும் இல்லை என சுகாதார அமைச்சு வலியுறுத் தியுள்ளது.
அத்துடன், சகல வைத்தியசாலைகளுக்கும் முறையாக மருந்துகளை வழங்குவதற்கென விசேட செயற்திட்டம் ஒன்று அமுல்படுத் தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிகால் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்து பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கான மருந்து பொருட்கள் அடங்கிய 13 ஆயிரம் வகையான ஒளடதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவை அனைத்தும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தினால் வருடந்தோறும் கேள்வி மனு கோரலின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு கொழும்பிலுள்ள பிரதான வைத்தியாசலைகளின் களஞ்சியங்களுக்கு இவை அனுப்பப்படுகின்றன எனவும், இங்கிருந்து கொழும்பிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நேரடியாகவும் மாகாண வைத்தியசாலைகளுக்கு அந்தந்த மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலை களஞ்சியங்களின் மூலம் சிறுசிறு வைத்தியசாலைகளுக்கு இவை அனுப்பப்படுகின்றதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான முறைமையின் கீழ் மருந்து பொருட்கள் அனுப்பப்படுவதனால் ஒரு சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதில்லை, ஏனென்றால் 13 ஆயிரம் வகையான மருந்து பொருட்களை பெற்று அவற்றை விநியோகிக்கும் ஒரு திட்டமாகும். மருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் கம்பனிகள் அவற்றை அனுப்புவதில் ஏற்படுத்துகின்ற தாமதம், விநியோகத்தில் ஏற்படுகின்ற சிரமங்கள் மற்றும் தாமதம், பேன்றவற்றால் ஒரு சில சந்தரப்பத்தில் வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள் காணப்படுவதில்லை. ஆனால் பிராந்திய களஞ்சியசாலைகளில் இவை காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஒரு சில குறைப்பாடுகள் ஏற்படலாம். இந்த குறைப்பாடுகள் கண்காணிக்கப்படுவதுடன் கொழும்பு பிரதான வைத்திய விநியோக பிரிவின் பணிப்பாளரும் குழுவினரும் இணைந்து எங்கு மருந்து பற்றாக்குறை நிலவுகின்றதோ உடனடியாக அவற்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர் எனவும் இது நாளாந்தம் நடைபெறுகின்றது எனவும் ஆகவே நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சகாதார பிரிவில் காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment