கனடாவிலுள்ள இந்துக்களின் கோயில்களை தாக்கியவர்கள் ரகசிய கமராவில் பதிவு!
கனடாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வரும் நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயண் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த 23-ம் தேதி அடித்து உடைத்து சென்றனர். இது கனடாவில் வாழும் இந்துக்களை மிகவும் பாதித்தது.
இந்நிலையில் அங்குள்ள ரகசிய கமராவில் இருவர் பேஸ்பால் பேட்டை வைத்துக்கொண்டு கோவிலின் ஜன்னல்களை உடைத்துவிட்டு பேட்டை தூக்கி எறிந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது இன ரீதியிலான வெறுப்புணர்விலேயே நடந்து இருக்கலாம் என்று அங்குள்ள இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், சர்ரே போலீசார் இன ரீதியிலான வெறுப்பு உணர்வாக தோன்றவில்லை, இது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலாக தெரிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் இருந்தும் இந்த தாக்குதலுக்கு குடியுரிமை அமைச்சர் ஜெசன் கென்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment