பரிசு யாருடையது? வெல்லப்பட்ட அதிர்ஷடலாப சீட்டுக்கு தனித்தனியாக உரிமைகோரிய கணவனும் மனைவியும்!
அதிர்ஷடலாப சீட்டு ஒன்றின் மூலம் பத்து இலட்சம் ரூபா வெல்லப்பட்டதையடுத்து அவ்அதிர்ஷடலாப சீட்டுக்கு கணவனும், மனைவியும் தனித்தனியாக உரிமைகோரி யுள்ளதால், குறித்த அதிர்ஷடலாப சீட்டு யாருடையது என கண்டறிந்து உறுதிப்படுத்தும் வரையில், பரிசு வழங் குவதை ஒத்திபோடுவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.
குறித்த அதிர்ஷடலாப சீட்டு மூலம் பரிசை வென்றதையடுத்து, வெற்றிக்குரிய அதிர்ஷ்ட இலாப சீட்டுக்கு கணவனும், மனைவியும் உரிமை கோரி கம்பொல பொலிஸில் முறையிட்டுள்ளனர். வெற்றியீட்டிய அதிர்ஷ்டலாப சீட்டானது, தனது மகனுக்கு ஏடுதொடங்கிய நல்லநேரத்தின் பிரகாரம் குறித்த அதிர்ஷ்டலாப சீட்டை கொள்வனவு செய்ததாகவும், அதற்கிணங்கவே தனக்கு இப்பரிசு கிடைத்ததாக மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இல்லை, இல்லை தன்னால் கொள்வனவு செய்யப்பட்ட அதிஷ்டலாப சீட்டே மனைவியினால் லொத்தர் சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த அதிர்ஷடலாப சீட்டு யாருடையது என கண்டறிந்து உறுதிப்படுத்தும் வரையில் பரிசு வழங்குவதை ஒத்திபோடுவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment