சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் தொடர்பில் இலங்கையிடம் மன்னிப்பு கோரியது ஜ.சி.சி!
ஜூன் 6ம் திகதி ஆரம்பமான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கைத் தேசியக் கொடி மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்ட போது ஹிந்தி மொழிப் பாடலொன்று ஒலிபரப்பப் பட்டிருந்தது இந்த விடயம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறு ஏற்பட்ட அசாதாரண சம்பவத்திற்கு சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கைக்யிடம் மன்னிப்புக்கோரியுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுமென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்ததுடன், அது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தது. இதற்கிணங்க இலங்கை கிரிக்கெட் சபை அனுப்பிய கடிதத்திற்குப் பதிலனுப்பியுள்ள ஜ.சி.சி சுற்றுத்தொடர்களுக்கான நிர்வாகி கிறிஸ் ரெட்லீ, இவ்விடயத்திற்காக மன்னிப்புக் கோருவதாகவும், குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்ய நியமிக்கப்பட்ட நிறுவனத்திடம் இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment